News

பாஜக – 2019 குருசேத்திரத்துக்குத் தயாராகுங்கள் இதோ உங்கள் சக்ரவியூகமும், பிரம்மசிர்ஷாஸ்திரமும்(பாகம் II)

பாஜக – 2019 குருசேத்திரத்துக்குத் தயாராகுங்கள்

இதோ உங்கள் சக்ரவியூகமும், பிரம்மசிர்ஷாஸ்திரமும்(பாகம் II)

Mahabharata_KrishnaArjun_ISKON_Flikr_380x255

2019ல் வெல்வதற்கு பாஜக எடுக்கவேண்டிய முயற்சிகளைப்பற்றி முந்தைய பாகத்தில் (இங்கே படிக்கலாம்) சொன்னதைப்போல, இப்பொழுது அரசு இன்னேரத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

 1. ஆளும் அரசாங்கம்தான் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் எதைப் பேசவேண்டும் என முடிவுசெய்யவேண்டுமே அன்றி, எதிர்வழியில் அல்ல. அரசு திறமையாக வேலைசெய்யவேண்டும். கடுமையாக அல்ல.
 2. அரசு, தினசரி,வாராந்திர,மாதாந்திர ஊடகச் செய்திகளை வெளியிடவேண்டும். முடியாவிடில், அதற்கான சரியான ஆளிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்
 3. மன் கி பாத் இயக்கத்தை மாதாந்திர ஊடக சந்திப்பாக மாற்றவேண்டும். தலைவர்களுக்கு தயக்கம் இருந்தால், அவர்களுக்கு உவப்பான பத்திரிக்கையாளர்களைத் தயார் செய்து சரியான கேள்விகளை உருவாக்கவேண்டும். என்னவாக இருந்தாலும் ஊடக சந்திப்புகளும், பேட்டிகளும் தொடர்ந்து நிகழவேண்டும்.
 4. DD தொலைக்காட்சியை மிட்டெடுக்கவேண்டும். அதை BCC,CNNக்கு ஒப்பான ஒரு உலகத்தர சேனலாக உயர்த்திக்காட்டவேண்டும். விளம்பரங்கள், பேட்டிகள். விவாதங்கள் அனைத்தும் அரசாங்க தொலைக்காட்சிக்கே அளிக்கப்படவேண்டும். சிறந்த பேச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
 5. சாதனைகளை அளவுக்குமீறி உயர்த்திப்பேசுவதோ, பெருமைக்கான வாக்குறுதிகளை வழங்குவதோ தவிர்க்கப்படவேண்டும். இன்னொரு இந்தியா ஒளிர்கிறது தரத்திற்கான உயர்வு நவிற்சியை நம்மால் பொறுக்கமுடியாது. காங்கிரஸ் நிஜங்களைச் சொல்லி உடைக்க வாய்ப்பளிக்கக்கூடாது.
 6. இப்போதைய சூழ் நிலையில். மீடியா, எதிர்கட்சிகள் ஆட்சிசெய்யும் மா நில அரசுகள் உருவாக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே 2019ம் ஆண்டுக்குள் 30% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே பெரிய வெற்றியாகும். கட்சி, வாக்குவங்கி குறைந்த இடத்தில் கவனத்தைச் செலுத்துவதைப்போல, அரசு, வாக்குவங்கி அதிகமான இடத்தில் முன்னேற்றத்திற்காக தன் கவனத்தைக் குவிக்கவேண்டும். உயர் நகரங்கள், சாலைப்பாதைகள்,துறைமுகங்கள்,விரைவு ரயில்கள் போன்றவற்றை அங்கே நிறைவேற்ற வேண்டும்
 7. பியுஷ் ஜோஷி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் போன்ற திறமுள்ள அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற, திறமையானவர்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கவேண்டும்.
 8. புது வாக்குறுதிகளை அளிப்பதைவிட, பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தேர்தல் வெற்றியை அளிக்கும். எடுத்துக்காட்டாக AIIMS மற்றும் புதிய IIT அறிவிப்புகள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவற்றிற்கான இடங்கள் கூட முடிவுசெய்யப்படவில்லை. அதுபோலவே, பங்குமுதலீட்டுப் பரிவர்த்தனைகளுக்கென தனிஅமைச்சகம் அமைப்பதோ, அல்லது அவ்வேலைகளை பொறுப்புள்ளவர்களைக் கண்டறிந்து ஒப்படைப்பதோ செய்யவேண்டும்.
 9. முந்தைய ஆட்சி, இந்திய கல்வி முறையை பலவழிகளில் சீர்குலைத்திருக்கிறது. சமச்சீர்கல்விமுறை உட்பட. புதிய அரசு, முற்றிலும் நவீனபடுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கைகள் உருவாக்கி நம் குழந்தைகளைக் காக்கவேண்டும்.
 10. அரசு உளவுத்துறை, இரண்டாண்டு ஆட்சிக்கு பிறகும், காங்கிரஸ் இயக்க ஸ்லீப்பர்செல்களால் நிறைந்திருப்பதாகத் தெரிகிறது. டெல்லி சர்ச் தாக்குதல், உணப்பொருள்விலையேற்றம், ரோஹித் வெமுலா, JNU பற்றியெல்லாம் ஏன் அரசாங்கத்திற்குத் தெரிந்திருக்கவில்லை? இது சரிசெய்யப்படவேண்டும்.
 11. அருண் ஜெட்லியை நிதியமைச்சமகத்திலிருந்து நீக்கவேண்டும். அரசும், கட்சியும் இந்த முக்கிய மாற்றத்தால் நிச்சயம் பலன்பெறும். அவர் ஏன் நீக்கப்படவேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே வாசிக்கலாம்.
 12. எண்ணூறுக்கும் மேற்பட்ட்ட திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அவற்றில் நூறு தொடங்கப்பட்டால் கூட, நிதிஆலோசகர்கள் பொருளாதார உயர்வதற்கான சாத்தியங்களைச் சொல்வார்கள். உடனடியாகத் தொடங்குவதோ, அல்லது அதற்கு வாய்ப்பிருக்கும் மாநிலங்களுக்கு மாற்றுவதோ முக்கியத்தேவை. எடுத்துக்காட்டாக, சந்திரபாபு நாயுடுவின் ஆந்திரப்பிரதேசம் இந்த வாய்ப்பை வழங்கலாம்.
 13. அரசு, இந்துக்களின் ஓட்டினால்தான் வென்றது என்பதையும், மறுபடியும் இந்துக்களின் ஓட்டினால்தான் வெல்லும் என்பதையும் உணரவேண்டும். எண்பது சத இந்துக்கள் நிராகரிக்கப்பட்டு, ஆதரவிற்கு நாடற்றுப்போவது துயரமிக்க செய்தியாகும். இந்துக்களின் ஒரே நாடு இந்தியா. இந்தியா நிச்சயம் அவர்களின் மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பதற்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும்.
  • மதமாற்றதடைச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும், ஒருவேளை எதிர்கட்சிகளின் போராட்டத்தில் தோல்வியடையும் என்றாலும் கூட, இந்துக்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும்முயற்சி என்பதை நிரூபிக்கவாது கொண்டுவரப்படவேண்டும்.
  • சிறுபான்மையினர் தன் மதகலாச்சாரத்தைக் காப்பாற்றும் நேரத்தில், இந்துக்கோயில்கள் நிர்வாகச் சீர்கேட்டினாலும், அரசின் சுய நலத்தேவைகளினாலும் சீரழிகிறது. இந்துக்கள் சுதந்திரமாக அவர்களின் மத,கலாச்சார செயல்பாடுகளையும், வழிபாட்டு இடங்களையும் காக்கும் முழுஉரிமையைப் பெறவேண்டும். குறைந்தபட்சம், பாஜக ஆளும் மா நிலங்களிலாவது இந்நிலைவரவேண்டும்.
  • மக்களுக்குக் கல்வியளிப்பது அரசின் கடமை. இது அரசின் உடைமையாக இருக்கவேண்டுமே ஒழிய, தனியார் தான் விரும்பும் அளவில் செய்வதாக இருக்கக்கூடாது. அரசு உதவி பெறும் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இருக்கும்போது, இந்துக்களின் கல்வி நிறுவனங்கள் மட்டும், அரசாங்க உதவிபெறாதபோதும்,கல்வி உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு இடஒதுக்கீட்டுக்கு கட்டாயப்படுத்தப்படக்கூடாது. இது இருவகையினருக்கும் சமமான சட்டவிதிகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
  • ராமர் கோயில் வாக்குறுதி ஒன்றே பாஜகவின் தோற்றத்திற்குக் காரணம். வருடங்கள் ஓடிவிட்டன. அடுத்த தேர்தலுக்கு மனுதாக்கல் செய்யுமுன் ராமர்கோயிலில் வேண்டிக்கொள்வதோ, தேர்தலறிக்கையை ராமர்கோயிலில் வெளியிடுவதோ நிகழ வேண்டும்.
 14. காங்கிரஸையோ, 2002முதல் உங்களை திட்டுபவர்களுடனோ இணைந்து செயல்பட்டால் நோபல் பரிசு கிடைக்கும் என்று சொன்னாலும் அது பொய்யே. உங்களுக்கு வாக்களித்தவர்கள் தேசபக்தர்கள்.அவர்கள் குடும்பங்கள் காங்கிரஸின் சீரற்ற ஆட்சியாலும் அதிகாரத்தாலும் கஷ்டப்பட்டாலும் வாக்களித்தவர்கள். ஊடக தந்திரத்தை ஏற்கனவே இங்கே உங்களை பிரதம மந்திரியாக அழைத்து விளக்கியிருக்கிறேன்.எனவே:
  • அந்த நிர்வாகக்குழுமத்தை அழியுங்கள்.
  • சிறந்த சட்ட அமைச்சரையும், சட்ட நிபுணரையும் அமைத்து, 2G,3G,CWG உள்ளிட்ட ஊழல்வாதிகள் 2019க்கு முன் தண்டிக்கப்படவேண்டும். லல்லுப்பிரசாத் யாதவ் போன்ற குற்றவாளிகள் சிறையிலிருக்கும்படி செய்யவேண்டும். நாட்டை ஆள்பவர்களால அல்ல.
  • பாகிஸ்தான், காஷ்மீருடனான பேச்சுவார்த்தைகள் போதும். பாகிஸ்தானிடுடன் போரிடுவதன் சாத்தியங்களை யோசியுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது.
 15. நாட்டுமுன்னேற்றம் என்பது நீதி சரியாகவும் திறமையாகவும் இருக்கும் நிலைமட்டுமே. நீதித்துறை மீதான உங்கள் அதிகாரம் வரயறைக்கு உட்பட்டதாக இருக்கும்போது, காங்கிரஸின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலதிகமான நீதிபதிகளையும் வசதிகளையும் உருவாக்கலாமே? ஏன் உச்சமன்றத்தின் கிளைகளை மாநிலங்கள்தோறும் உருவாக்க நீங்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது? அவர்கள் ஏற்றுக்கொள்ளமறுத்தாலும், மக்கள் உங்களின் நோக்கங்களை அறிந்து பாராட்டுவார்களே?

பிரம்மசிர்ஷா அஸ்திரம்:

images

சக்ரவியூகம் அமைந்ததும், பிரம்மசிர்ஷா அஸ்திரம் உபயோகிக்கும் காலம் வரும். இந்த அஸ்திரம், பிரம்மாஸ்திரத்தை விட நான்கு மடங்கு அதிக பவர் கொண்டது. கடைசிக்கட்டமாக சூழலுக்கேற்ப பயன்படுத்த வேண்டியது.

 1. தனியார்த்துறையில் இடஒதுக்கீடு: காங்கிரஸின் பிடியிலிருந்து பலாண்டுகளாக ஏமாற்றப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை விடுவிக்கும் பொருட்டு, சமத்துவ சட்டை ஒன்று உருவாக்கப்படவேண்டும். இதன் கீழ், அரசாங்க உதவியினை வரிகளின் மூலம், வசதிகளின் மூலம் பெறும் அனைத்து தனியார் நிறுவனங்களும் 15% ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 10% சாதிவேறுபாடற்று ஏழ்மையிலிருப்பவர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். இது 25சத இடஒதுக்கீட்டைப்பெற்றுத்தரும். இதை நிறைவு செய்யாத நிறுவனங்கள் வசதிகளை விட்டுத்தரவேண்டும். இதை பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு இந்திய உள்ளூர் சமூகக்கோட்பாடாகக் கொள்ளவேண்டும். அத்தனை நாடுகளும் யூகே,பிரேசில் அல்லது ஜப்பான், மத்தியக்கிழக்கு நாடுகள் 30 முதல் 100 சதம் வரையிலான ஒதுக்கீட்டை உள்ளூர் மக்களுக்கு வைத்திருக்கின்றன. இந்த சமத்துவ சட்டம் அரசாங்கவேலைகளில் அரசின் இடஒதுக்கீட்டை விட ஒரு படி மேலாக இருக்கவேண்டும். அரசு வேலைகள் குறைந்திருக்கிறது எனும் குற்றச்சாட்டை இது சரி செய்யக்கூடும்.
 2. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி: அருண்ஜெட்லியோ அல்லது யார் அடுத்த நிதியமைச்சாரானாலும், ஒன்றரை லட்சம் கோடியை ஒதுக்கச் சொல்லுங்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட இதே அளவு கடனை தள்ளுபடி செய்ய முடியும்போது, ஒதுக்கீடு செய்து, விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு உபயோகிக்க முடியும் தானே. இது மீண்டும் 2009ன் காலத்திற்கு கொண்டு செல்லும். அக்காலத்தில் அம்பத்தி நாலாயிரம் கோடியை விட்டுத்தரமுடிந்தது. அது பத்துவருடங்களுக்கு முன்பு. 2018 காலத்தில் குறைந்தது 1.5 லட்சம் கோடி தேவைப்படும்.
 3. இறுதி பிரம்மசிர்ஷா அஸ்திரம்: உங்களுக்கு வாக்களித்த நடுத்தரவர்க்கத்திற்கு வருமானவரி திட்டங்களினால் ஏமாற்றமே. ஒரு சராசரி இந்தியக்குடிமகனின் முக்கிய பிரச்சினை தனி நபர் வரியே அன்றி, நிறுவன வரி அல்ல. ஆகவே பாஜக, இந்த வரியை முற்றிலுமாக நீக்கவேண்டும். இது நடுத்தரமக்களை ஊக்கப்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இது நிதி நிலையை பெரிய அளவில் பாதிக்காது. இதைப்பற்றி திரு ஜெகனாதன் இங்கே விரிவாக அலசியிருக்கிறார்.

அளிக்கப்படும் சலுகைகளையும் வசதிகளையும் கணக்கிட்டால் விவசாயத்துறை வருடத்திற்கு 3,00,000 கோடி செலவு வைப்பது. மூன்றுலட்சம் கோடி பெறுமானமுள்ள உதவிகளுக்குப் பிறகும் விவசாயத்துறையில் லாபத்தை உருவாக்க முடியாதெனில் அதைத் தொடர்வதன் அர்த்தமென்ன? நேர்மையாக யோசித்துப்பார்த்தால் ஐந்து ஆண்டுகளில் அறுபது ஆண்டு கறையைத் துடைத்துவிட முடியாதுதான்.தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டால், ஒன்றரைலட்சம் கோடி என்பது மிகக்குறைவானதும் இயல்பானதும்தான்.

வலதுசாரி நண்பர்கள் எனது பிரம்மசிர்ஷா அஸ்திரத்திற்கான என் ஆதரவை மறுக்கக்கூடும். ஆனால் அடுத்த இரண்டு முறையும் ஆட்சிக்கு வருவது முக்கியம். அல்லது இந்தியா இனி ஒருபோதும் அச்சே தின் போன்ற அருமையான நாட்களைத் திரும்ப பார்க்காது. நிறுவனமயமாக்கலை எதிர்த்து போராடுகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரே வழி, நான் கேட்ட அனைத்தையும் செய்வதுதான். அமித்ஷாவுக்காக

ராஜ்யசபையில் தேசிய ஜனநாயக்கூட்டணி 2019வரை பெரும்பான்மை பெற வழியில்லை என்பதால், சட்டங்களை ராஜ்யசபையில் நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி, இப்போது நடந்துகொண்டிருக்கும் லோக்சபை கூட்டத்தொடரில் முடிந்தளவு அதிகமான சட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றுவைத்து, ஆறுமாதம் காத்திருந்து, இரண்டு அவைகளும் கூடும் பனிக்கால கூட்டத்தொடரில், அவர்கள் ஆறுமாதம் மட்டுமே சட்டங்களை ஒப்புதலுக்கு வைத்திருக்க முடியும் என்பதால், அத்தொடரில் நிறைவேற்றிவிடலாம்.

0

kanimozhi


%d bloggers like this: