News

பாஜக – 2019 குருசேத்திரத்துக்குத் தயாராகுங்கள் இதோ உங்கள் சக்ரவியூகமும், பிரம்மசிர்ஷாஸ்திரமும்(பாகம்

 

பாஜக – 2019 குருசேத்திரத்துக்குத் தயாராகுங்கள்

இதோ உங்கள் சக்ரவியூகமும், பிரம்மசிர்ஷாஸ்திரமும்(பாகம் 1)

download-2

(பிரம்மாஸ்திரம்)

2019ல் பாஜக தோல்வியுற்றால், இந்தியா ஏழை நாடாகவே இருப்பது மட்டுமல்லாமல், துண்டுதுண்டாக உடைந்துவிடும். இது காங்கிரஸ் மற்றும் கம்யூனிச இயக்கங்களால் ஆதரிக்கப்படும் JNU உள்ளிட்டோரின் நீண்ட நாள் ஆசை. ( மேலும் பாஜக ஆட்சியில் மட்டுமே அச்சே தின் வரமுடியும் என்பதைப்பற்றி படிக்க )

பாஜகக்கான 2019 வெற்றி சூத்திரம்:

இரண்டாண்டு ஆட்சி, மூன்று நிதி நிலை அறிக்கைகளுக்குப் பிறகு, 2019ல் வெல்வதற்காக பாஜக தன்னை தயார்படுத்திக்கொள்வதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.

 

இவ்வாண்டு தேர்தல் நடக்க இருக்கும் ஐந்து மாநிலங்களில், கடுமையான போட்டி இருக்கக்கூடும் என தேர்தல் நோக்குனர்கள் கருதும் அஸ்ஸாம் தவிர பிற மா நிலங்களில் பாஜக தோற்றுவிட்டதாகவே நாம் கொள்ளலாம். 2017லும் கர்னாடகா,குஜராத்,ராஜஸ்தான்,பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பாஜக கடுமையான போட்டியாளராக இருக்கும். அப்போதும் வெல்வோம் என்பது நிச்சயமில்லை. தேர்தலுக்கான கடந்த இரண்டாண்டு முன்னேற்பாட்டு வேலைகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆய்வாளர்கள், இப்போதைய பாஜக அலை, 2018 வரை தொடரும் என்றே நினைக்கிறார்கள். சமீபத்தில் டெல்லி மற்றும் பீகாரில் நிகழ்ந்த கடும்போட்டியே இதற்கு சாட்சி.

சமீபத்திய மற்றும் எதிர்பார்க்கப்படும் தோல்விகளுக்கு காரணமாக இருப்பது திரு. அமித் ஷா அவர்கள் பாஜகயை வழிநடத்தும் முறைகளே அன்றி, ஆட்சியின் நிர்வாகமுறைகளல்ல.

 

ஆகவே, போதுமான காலம் இருக்கையிலேயே முக்கிய தேர்தலைக் கவனத்தில் கொண்டு பணியாற்றுவோம். பாஜக, இடைத்தேர்தல் தோல்விகளைக் கணக்கில் கொள்ளாமல் இக்காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் 2019லும் ஆட்சிக்கு வருவது மிகச் சுலபமான காரியமே.

 

பாஜகவின் 2004 தோல்வி : ஒரு பார்வை

பாஜக மற்றும் காங்கிரஸுக்கான வாக்கு வங்கி 1999,2004 வருடங்களில் மாறாமல் இருந்தாலும், காங்கிரஸ், 40 மேலதிக சீட்டுகளை 2004ல் பாஜகவிடமிருந்து வெல்லமுடிந்தது. ஏன்? காங்கிரஸ் கிராமங்களில் இறங்கி வேலை செய்தது. அதே பழைய பாணி : இந்துக்களைப் பிரிப்பது, சமத்துவத்தின் பெயரில் அவர்களுக்கு அழுத்தம் குடுப்பது. காங்கிரஸைப்பொறுத்தவரை, சமத்துவம் என்பது பெரும்பான்மை மக்களை குறிவைப்பது. அதே நேரத்தில் சாதி ஏழ்மைப்பிரச்சினைகளை தூண்டி குளிர்காய்வது. பாஜகவோ, இந்தியா ஒளிர்கிறது இயக்கத்தில் கவனம் கொண்டிருந்தது.

காங்கிரஸ் வெற்றிகரமாக இந்த சாதி,இன,மத விளையாட்டுகளை சாதகமாகப் பயன்படுத்தக் கற்றிருக்கிறது. இக்காரணத்தில் மட்டுமே, சுதந்திரத்திற்குப்பிறகான இந்த எழுபது ஆண்டுகளில் அறுபது ஆண்டுகால ஆட்சிசெய்து கல்வி,ஏழ்மை,கட்டுமானங்களில் வளர்ச்சியில்லாத நிலையிலும் அவர்களால் தொடர்ந்து வெல்ல முடிகிறது.

 

ஏன் காங்கிரஸ் 2014ல் பாஜகவிடம் தோற்றது?:

 1. இரண்டு முக்கிய காரணங்கள், நிர்வாகச் சீர்கேடு மற்றும் பெரும் ஊழல் பிரச்சினைகள். கூட்டணிக்கட்சிகளும் மூத்ததலைவர்களும் கட்சியை விட்டு, தேர்தல் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே தோல்விபயத்தில் வெளியேறினார்கள். இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் உத்திரபிரதேச தேர்தல் நாயகன் அமித்ஷா உதவியுடன் மோடி அதிகாரத்திற்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசியலில் சொந்தப் பெரும்பான்மையில் வென்றவராக மோடி இருந்தார்.
 2. தேர்தல் தோல்விமட்டுமல்லாது, காங்கிரஸ், போதுமான இடங்கள் பெறாததால் எதிர்கட்சி தகுதியையும், இழந்தது. ஆனால் மோடிக்கு எதிரான பிரச்சாரத்தின் மூலம் பீகார் தேர்தல்களில் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் பெரும்பான்மை ஓட்டுகளுடன் வந்தார்கள். இந்த வெற்றிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நின்று போரிட்டதே காரணம்

2016ன் அனைத்து மாநிலதேர்தல்களிலும் தோற்பதாக வைத்துக்கொண்டாலும், 2017லிருந்து மாநிலத்தேர்தல்களில் வெற்றிபெறவும், 2019ன் முக்கிய தேர்தலில் வெல்லவும், எதிரிகளை சக்கரவியூகத்தில் மடக்கி, அவர்களை பிரம்மமகா அஸ்திரத்தால் வெல்லவேண்டும்

images-1

(பாஜக, 2019 குருச்சேத்திரத்துக்கு தயாராகுங்கள். இதோ உங்கள் சக்ரவியூகமும் பிரம்மாஸ்திரமும்)

பிரம்மசிர்சா அஸ்திரம், பிரம்மாஸ்திரத்தைவிட நான்குமடங்கு ஆற்றல் வாய்ந்தது. நான், மூன்று முறை பயன்படுத்த பரிந்துரைப்பேன். மோடி அவர்கள், இதை தனது இறுதிப்போராட்டத்தில் சூழலுக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம். மகாபாரதத்தில் கூட, பரசுராமர்,பீஷ்மர்,துரோணர்,கர்ணன், அஸ்வத்தமா மற்றும் அர்ஜுனன் போன்ற சிலரே இதை உபயோகிக்கும் முறை அறிந்திருந்தனர். கலியுகத்தில் பிரதமர் மோடி மட்டுமே இதைப்பயன்படுத்த முடியும் என நினைக்கிறேன்.

 

பாஜக சக்ரவியூகத்திற்கு தயாராவதற்கான இலக்குகள்:

”தொடர்வெற்றியின் ரகசியம், ஆளுங்கட்சி, பிரதான எதிர்கட்சியாக நினைத்துக்கொள்வது மட்டுமே. இது போராட்டகுணத்தை அளிப்பதுடன், எதிரிகளையும் நீக்கிவிடும் – கனிமொழி”

 1. இரண்டாவது முறையாக கட்சித்தலைவராகியிருக்கும் அமித்ஷா, அவரது ஈடுபாட்டையும் மனஎழுச்சியும் பீகாரின் அடிக்கு பிறகு இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. பாஜக, மீண்டும் தன் பலத்தை உறுதிசெய்யவேண்டும். ஏனெனில், 2014 ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்த தீவிரமுயற்சிகளைச் செய்தது. பத்துகோடி பேர் இணைப்பு உள்ளிட்ட பல முயற்சிகள் உடனே காணாமல் போய்விட்டது. தேர்தலில் வெல்ல படித்த துடிப்புள்ள உறுப்பினர்கள் தேவை.
 2. இந்தாண்டு தேர்தலைச் சந்திக்கும் ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாடு முக்கிய ஒன்று. பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சிபலத்தை மேம்படுத்தும் எந்தச் செயலையும் செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒரு சிறப்பான கட்சிக்கூட்டணி கூட முடிவாகவில்லை. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அவர்களுடன் முயற்சி நடந்துவருவதாக தலைமைக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

நான் இன்னும் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் நினைத்திருந்தால் சென்னைக்கு வரும் உங்கள் தலைவர்கள் ஏன் என்னைச்சந்திப்பதில்லை? ஏன் சரத்குமார் இணைவதைப்பற்றி எனக்கெதும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை” என விஜயகாந்த் அவர்கள் ஜவதேகரிடம் கேட்டாதாக பாஜகவில் சொல்லப்படுகிறது.

 

முரளிதர் ராவ், மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனின் முயற்சிகள் தோல்விகளே. 2014ன் வானவில்கூட்டுக்குப்பிறது,2014ன் வானவில் கூட்டுக்குப் பிறகு, பாஜக பிறகட்சிகளுடன் இணைந்து கூட்டாக சந்திப்புகளையோ போராட்டங்களையோ செய்ததில்லை. இதுவே நாடுதழுவிய நிலைமை. அடிமட்ட அமைதி, மற்றும் கூட்டணிகளுடன் இணக்கமின்மை.

 1. கட்சிக்கு ஒரு உயர்மட்ட பேச்சாளர்தேவை. கட்சிக்குள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், பிறகட்சியிலிருந்தோ பொதுவாகவோ ஒருவரைக் கண்டறியவேண்டும்.
 2. மேல்மட்டத்தலைவர்கள், தாங்கள் கடந்துவந்த பாதையை மறக்காமல், உட்கட்சி முன்னேற்றத்தை வரவேற்கவேண்டும். பிரசாந்த்கிஷோர், தயாஜி கோபர்ஜிவந்தேரா, சத்விபிரக்யா, ஸ்ரீகாந்த் புரோகித் போன்றோரின் தியாகத்திற்கும், கடும் உழைப்பிற்கும் பிறகும் அவர்கள் மறக்கப்பட்டதும் புறக்கணிக்கப்பட்டதும், நேர்மையான கட்சி அபிமானிகளையும், இணைய விரும்பும் புதியவர்களுக்கிடையேயும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும்.
 3. பாஜக, அரசுடன் இணக்கமாக இருந்து கட்சியையும் உறுப்பினர்களையும் மகிழ்ச்சியூட்டும் சட்டங்களைக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டவேண்டும்
 4. கட்சியானது குறைந்த வாக்குள்ள, அல்லது வாக்குவங்கி இல்லாத மாநிலங்களில் தனது கவனத்தைக் காட்டவேண்டும். எளிதாக வெல்லும் குஜராத்தைவிட, தமிழகத்தின் மீது கவனத்தை அதிகப்படுத்தவேண்டும்.
 5. காங்கிரஸைப் பின்பற்றி,அரசாங்கத்தின் உதவியுடன், பாஜகவும் ஒரு வலுவான அமைப்பியலை உருவாக்கவேண்டும். மக்கள் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இயக்கமாக இல்லாம மக்கள் பின்பற்றும் ஒரு நிர்வாகமுறையை உருவாக்க்கும் இயக்கமாக மாறவேண்டும். எடுத்துக்காட்டாக, நிதி நிலை அறிக்கையின் சிறப்புகளைப் பரப்புவது, இர்ஷாத்ஜெயின் விவகாரத்தில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவது போன்ற தேவையான வழிகளை விட்டு, ரோஹித் வெமுலா, ஜெஎன்யு போன்ற தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடித்திருக்கவேண்டாம்.
 6. ஆளுகட்சியாக இருந்து ஆட்சியமைப்பை உருவாக்குவதற்குப்பதிலாக பாஜக, ஒரு வாயற்ற மனிதரைப்போல் அமர்ந்திருக்கிறது. பாஜக தலைவர்களும், தொண்டர்களும் தமிழகம்,கேரளம்,பிகார் மற்றும் மேற்குவங்கத்தில் கொல்லப்படும்போது பாஜக எந்த போராட்டத்தையும் செய்வதில்லை, காங்கிரஸ் சினிமாத்தன பிரச்சினைகளையும் பெரிய அளவில் எடுத்து போராடிக்கொண்டிருக்கும்போது.
 7. கட்சி, கட்சிக்கான ஊடக பலத்தை உருவாக்கவேண்டும். சொந்த செய்தி சேனல்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவற்றுடன், மொழிவளமுள்ள இளம் தலைமுறை ஆண்பெண் பேச்சாளர்களையும் இந்தியா முழுக்க உருவாக்கவேண்டும்.
 8. கட்சி, தற்போதைய கூட்டணிகளை இழந்துவிடாமலேயே தனக்கான வலுவான கூட்டணிக்கட்சியைக் கண்டடையவேண்டும், புதிய கூட்டணிகளை உருவாக்குவதிலும், பழைய கூட்டணிகளைதக்கவைப்பதிலும் பாஜக எப்பொழுதுமே தோல்வியே அடைகிறது.

இந்த பரிந்துரைகள் 2019 தேர்தலில் வெல்ல கட்சிக்குள் நிகழவேண்டும். இப்போதைய வியூகங்கள் தோல்வியுறும், மேலும் நமக்கான எளியவழியென்று எதுவுமில்லை. கூர்மையான, அனைத்துபாகங்களையும் கவனத்தில் கொண்ட முயற்சி நிகழவேண்டும். இவை தீர்வின் ஒரு பாதிமட்டுமே. இந்த சக்ரவியூகம் மற்றும் பிரம்மசிர்ஷா அஸ்திரங்களின் இரண்டாம் பாகத்திற்கு தொடர்ந்து இணைந்திருங்கள்,

 

(இரண்டாம் பாகத்தை இங்கே படிக்கலாம்)

 

எழுத்தாளரை டுவிட்டரில் @kanimozhi எனும் சுட்டியில் தொடர்புகொள்ளலாம். அல்லது @kuruksetra2019 டுவிட் குழுமத்திலும் இணைந்து பாஜகக்கான 2019 ஐடியாக்களை பரிந்துரைக்கலாம்

 

 


 

0

kanimozhi


%d bloggers like this: